ஆர்யா துர் வரத விநாயகர் மந்திர்...
இந்த ஆலயம் மகாராஷ்ட்ரா மாநிலத் திலுள்ள மஹாட் என்ற ஊரில், கலபுரா கபோலி தாலுகாவில் இருக்கிறது.
ராம்ஜி மகாதேவ் பில்வால்கர் என்ற பெஷாவர் வம்சத்தைச் சேர்ந்தவர் இந்த ஆலயத்தை 1725-ஆம் வருடத்தில் புதுப்பித்துக் கட்டியிருக்கிறார்.
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் எட்டு புகழ் பெற்ற விநாயகர் ஆலயங்களில் இது ஒன்று.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vinayagar_31.jpg)
கவுடின்யாபூர் என்ற ஊரில் பீம வம்சத் தைச் சேர்ந்த ஒரு மன்னர் இருந்திருக்கிறார்.
அவருக்கு வாரிசு இல்லை. அதனால் அவரும் அவரின் மனைவியும் முனிவர் விஸ்வாமித்திர ரைச் சந்திக்கச் சென்றிருக்கின்றனர். அப்போது விஸ்வாமித்திரர் காட்டில் தியானத்தில் இருந்திருக்கிறார். மன்னரும் மனைவியும் தங்களின் குறையைக் கூற, முனி வர் சில மந்திரங்களைச் சொல்லி, "இதை தினமும் உச்சரித்துவந்தால் உங்களுக்குக் குழந்தை பிறக்கும்'' என்று அவர் கூறியிருக்கிறார்.
அதேபோல மந்திரங்களை அவர்கள் கூற, ஒரு மகன் பிறந்திருக்கிறான். அவன் பெயர் ருக்மாங்கதன்.
அழகான தோற்றத்தைக் கொண்டிருந்த அவன் வாலிபப் பருவத்தை அடைந்த பிறகு, ஒருநாள் வேட்டைக்குச் சென்றிருக்கி றான். காட்டில் முனிவரான வாசகநவி என்பவரின் மனைவி முகுந்தா, இளவரச னான அவனைப் பார்த்துக் காதல் கொண்டி ருக்கிறாள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vinayagar1_1.jpg)
"என் மனதிலுள்ள ஆசைகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்'' என்று அவள் கூற, அதற்கு அவன் மறுத்திருக்கிறான்.
அதைத்தொடர்ந்து இந்திரன் அந்த இளவரசனின் வேடத்தைப் பூண்டு அந்தப் பெண்ணை அணுக, அவர்களுக்கிடையே உறவு உண்டாக, முகுந்தா கர்ப்பம் தரித்தி ருக்கிறாள். ஒரு ஆண் குழந்தை பிறந்தி ருக்கிறது. அவன் பெயர் கிரிட்ச மதா. காலப் போக்கில் அவனுக்கு உண்மை தெரிந்திருக்கிறது.
ஆகாயத்திலிருந்து ஒலித்த, "நீ இந்திரனின் மகன்' என்ற அசரீரியே காரணம். அதன் விளைவாக அவன் தன் தாயிடம் கோபமாகப் பேசியது டன் நிற்காமல், "நீ இலந்தைச் செடியாக மாறுவாயாக!'' என்று சாபமிடுகிறான்.
பின்னர் கோபம் தணிந்தபிறகு, தாயைச் சபித்ததற்காக அவன் வருத்தப்படுகிறான். தன் கவலையை வெளிப்படுத்தி, அவன் விநாயகரை வழிபடுகிறான். அவனுக்கு விநாயகர் ஆசீர்வாதம் அளிக்கிறார்.
"உனக்கு ஒரு மகன் பிறப்பான். அவனை யாராலுமே வெற்றிபெற முடியாது'' என்று கூறுகிறார்.
"நீங்கள் இங்கேயே இருக்கவேண்டும். இங்கு யார் வந்தாலும், அவர்களுக்கு நல்லது நடக்கவேண்டும்'' என்று அவன் விநாயகரை வேண்டுகிறான். அதைத் தொடர்ந்து விநாயகருக்கு ஒரு ஆலயத்தையும் அங்கு உருவாக்குகிறான். அந்த ஆலயம்தான் இது. அந்த வனப்பகுதி பத்ரகா என்று அழைக்கப்படுகிறது.
இங்கு ஆரத்தி நடக்கும்போது அளிக்கப் படும் தேங்காயைச் சாப்பிட்டால், குழந்தை பிறக்கும் என்பது ஆழமான நம்பிக்கை.இங்கிருக்கும் விநாயகர் சுயம்புவாக உண்டானவர். இந்த கோவிலின் கலசம் தங்கத்தால் ஆனது.
இந்த ஆலயத்திற்குச் செல்ல விரும்புபவர் கள் சென்னையிலிருந்து மும்பைக்குப் பயணிக்க வேண்டும். அங்கிருந்து 63 கிலோ மீட்டர் தூரத்தில் ஆலயம் இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-12/vinayagar-t.jpg)